Posts

Showing posts from June, 2022
என் செல்ல கோவில்பட்டி அகராதியே குட்டப்பட்டி அஞ்சலாரே  ஏர்வாடி கவியே திட்டங்குளம் வேசரே கழுகுமலை கவிச்சிறுவனே பெருங்கவியே சீனக்கவியே கவிமகனே தந்தைகவியே தலைப்பிரட்டையாரே மூத்த கிறுக்கே சாமியே சாருவே கோமுவே பிரேமே பிரேதனே ரேவதியே ரேவதியே உப்பே மலையே அம்மனேரியே குந்தானிமேடே நெற்குன்றத்து பள்ளமே தொண்டை மண்டலமே பன்றிமலை முருகனே பன்றிமலை ராமனே  நாகர்கோவில் சூரியனே பாரிமுனை கவிகளே குப்பத்து ராமனே நெற்றிமண் எடுத்தவனே சுயம்புலிங்கமே பிளாஸ்டிக் கவியே நண்பனே தறியே ஆற்றூர் பெருங்கவியே அபியே தேவியே தர்மபுரி அரசனே நாடோடித்தடமே குடியே குடி க்ளாஸே தமிழே தமிழம்மே இந்த செல்வராஜின் கவித்தாளை திருத்தி சுழியமிடுங்கள் கூடுதலாக Poor அல்லது  V.V. Poor இடுங்கள் தனக்கு தெரிந்த ஓரே ஒரு வட்டார வழக்கான நரகலை எல்லா கவிதையிலும் நிரப்பி வைத்துள்ளான். ஐந்து மதிப்பெண் கவிதைகளில் வெறும் கேள்விகளின் தொகுப்பை வரிசை மாற்றி அடுக்கியுள்ளான். இதுவரை ஏன் நெடுங்கவிதையின் பக்கம் நிரப்பப்படாமல் இருக்கு என்பதற்கு நெ டு ங்  க வி தை என்று பக்க விரயம் செய்துள்ளான். *இது குறித்த 'சார்' எழுதிய பேஸ்புக் குறிப்பு* இதுவரை நான் எழுத

பகற்கனவில் சிந்தித்தல்

முன்பகல் கனவொன்றில்  வளையலோசைகளுக்கேற்ப  தாயின் முகக் கற்பனையில் ஆழ்ந்து முரட்டு கால்களால் கருப்பை சுவர்களை  உதைத்து கொண்டிருந்த நேரம் வெளிவரும்போது எனக்கான வரவேற்பு  ஏற்பாடுகள் குறித்த  கனவுத் தீற்று - அதுதான் 'கெளதமனின் முதலாம் பகற்கனவு'  என்றழைக்கப்பட்டது... நடந்தது யாது?  குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நான்கரை கிலோவில் கரிக்குண்டாக விழுந்து அழுதவனை உதட்டு பிதுங்களோடு பார்த்து கொண்டார்கள் ஆனால் வெடி வெடித்தார்கள்  'தீவாளி' என்று பட்டப்பெயர் வைத்தாள் 'பப்பாளி' அம்மா...  'தீவாளி'யின் ஆயிரத்து சொச்சமாவது பகற்கனவு தீபாவளி பண்டிகை தன் ஆயுள் முழுதும் ஒரே நாளில் வருவது இல்லை என்று உணர்ந்த சிறுவனுக்கு வாய்ப்பாடு மனனம் தடைப்பட்டது.  அப்போது பின்மதியம். அக்டோபர் 26, 28, 30 நவம்பர் 3,5,7 இப்படி தீபாவளி வரும் நாளில் தன் பிறந்த நாளை கொண்டாடி வரும் தொண்டர்களுடன் சுவர் விளம்பரங்களில் ஏற்படும் தேதி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு நடந்த கூட்டத்தில் ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் உள்ள தனி சக்தி குறித்து விவாதிப்பது.... மீண்டும் நடந்தது யா