Posts

Showing posts from May, 2023

புறநகரின் நீர்நிலைகளுக்கு

குடியரங்கை கைவிட முடியாது அதன் இரைச்சல் ரீங்காரம் கூட்டு மனநிலை பிரார்த்தனை நடை பிறழும் கால்கள்  விழிப்படைந்த மூளைகள் கண்டுபிடித்த உண்மைகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிரம்பி வழியும் சிறுநீர்ப்பை புகை மண்டிய நுரையீரல் புட்டம் உடைந்த நாற்காலிகள் பழத்துண்டுகளின் மேல் நிற்கும் பல் குத்திக்கள் இவையனைத்தும் க்ளிக் க்ளிக் என்ற ஓசையோடு  கவிதைக்குள் வந்துவிடுகின்றன அதன்பிறகு மூளை பினாத்த  தொடங்குகிறது ஒழுக்க சீலர்கள் தொடங்குமிடம் ஒழுக்க சீலர்களின் முடிவிடம் நடுநாயகர்களின் வழக்கம் குட்டி நாய்கள் தங்கள் இரைப்பையை  விரிவுப் படுத்திக்கொள்கின்றன சின்ன பூனைகள் கடுவன்களாகின்றன எலிக் குடும்பங்களின் சாம்ராஜ்யம் வலுப்பெறுகின்றன  உலகப்பெண்களின் இருப்பை ஞாபக்கப்படுத்தும் திருநங்கைகள் ஏன் நீங்கள் உயரமாக இருக்கிறீர்கள் பயத்தை உண்டு பண்ணும் சத்தம் உங்கள் உள்ளங்கையில் எப்படி கிளம்புகிறது குடிமகன்களில் ஒருவன் கேள்வி தொடுக்கிறான் பின்பு அப்பெண்ணின் புஜங்களில் தொங்கியபடி ராட்டினம் சுற்றுகிறான் அவள் சரசரவென சுத்த புழுதி பெருகி மேலே எழும்புகிறது குடிமக்களின் ஆர்பரிப்புக்கிடையே தன் போலி முலையை சரி செய்கிறாள் அவள் புட்