Posts

Showing posts from October, 2022

ஜென்ம தினம்

பனிரெண்டு வயதின் தொந்தியை யாருமே குறைசொன்னதில்லை ஆயத்தங்களே இல்லாமல்  போரில் வென்ற நாட்களவை இரண்டொரு வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் வழிப்போக்கன் சோம்பலில் திளைத்த காலங்களை  நினைவுப்படுத்தி செல்கிறான் திடீரென தோன்றி லட்சிய ஜோடனைகளை  பகிர்ந்து கொண்டு செல்வதவன் வழக்கம் அவன் இழந்த சொந்தங்களின் வயதைச்  சொல்லி நெகிழ்த்துவான் ஒவ்வொருமுறையும் அவனிடம் விடைபெறும் போதும் அப்பாடா தப்பித்தோம் என்ற உணர்வு  தோன்றி மறைகிறது நாம் வயதை மிச்சம் வைத்திருக்கிறோம் இன்னும் கொஞ்ச தூரம் தான் நாம் ராபர்ட் ப்ராஸ்டின்  பெரிய பாதையில்  சென்று கொண்டிருக்கிறோம்  வெகு சிலரே தேர்ந்த பாதையிது இந்த பாதையில் குடித்து விட்டு  வண்டி ஓட்டலாம்  தினசரி முகச்சவரம் செய்ய வேண்டியதில்லை பகற்கனவுகளின் குறட்டையை  யாரும் கேலி செய்யமாட்டார்கள் எந்தவொன்றையும்  திருப்தி படுத்த வேண்டாம்  நிதானமாக முதுகு பருக்களை  நோண்டி கொண்டிருக்கலாம் கைசூட்டில் இருந்து புறாவை பறக்க விட வேண்டாம் ஆனால்  நம் வியர்வையின் வீரியம் குறித்த சந்தேகத்தை விரட்டியபடி நடந்து கொண்டே இருக்க வேண்டும் சந்தித்தவர்களின் சாயலேறி கொண்டே வருவதை சுமக்க வேண்டும் மறைந்து கொண்

போன்ற சாயை

செய்யும் வேலையில் பல்வேறு சாயல்களை விட்டுசெல்லும் திருடன்  முன்பு செய்தவற்றை  முன்பு நிகழ்த்தப்பட்டவைகளின் தொகுப்பை புரட்டுகிறான் சிலவற்றை நினைவில் அழிக்கிறான் தான் செய்த ஒன்றா இது என பிரமிக்க சை இதை ஏன் செய்தோம் என சலம்ப பழைய ஆசிரியர் இவனிடம் அவராக கொடுத்தனுப்பியவை யாது ஆசிரியரிடம் இவன்  திருடி வந்தவை யாது அவருக்கு பிடித்த இவனின் சம்பவங்கள் அவர் திருட சொன்ன வீடு அவருக்காக உடைத்த பூட்டு எல்லாம் நினைக்கையில் தான் ஒரு அடியாளா சுயம்புத்திருடனில்லையா என்று படுகிறது அதன்பிறகு தான் இந்த இளநீர் கடை இது என் முழு உழைப்பில் வந்தது இதற்காக தூக்கத்தை இழந்திருக்கிறேன் பசியை யாருக்காகவும் இழக்கமாட்டேன் சில கடன்களை  வாழ் நாளெல்லாம் கழிக்க வேண்டும்  சில வித்தைகளை  கற்று கொடுத்தவனிடம் காட்டக்கூடாது இந்தவிரு எண்ணத்தால் தான் என்  வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது முதல் நூறு இளநீர் மட்டுமே திருடியது மற்றவை சந்தையில் வாங்கியது தோப்பு அமைக்கும் பணி நடைபெறுகிறது ஓவ்வொரு முறையும் என்னை அடித்து  மிரட்டும் போலீஸ்காரர் சொல்வார் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ஓடு நான் திரட்டிய லஞ்சத்தையும் எனது  தொடர்புகளையும் கண்டு