Posts

Showing posts from July, 2023

நிற்காமல் வீசும் பின்மதியக்காற்று

இதுவரை ஏரியின் முதுகை பார்த்துக்கொண்டிருந்தவன் முதன்முதலாக அதன்  முன்னால் நிற்கிறேன்  முகம் வேறொரு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வந்துவிட்டது ஏரி மதிய அசதியில் சரிந்திருக்கும்  தாய் போல கிடக்க முலைகளைத்தேடி ஊறும் குட்டிகளைப் போன்று எருமைகள் பச்சயத்தில் திளைக்கின்றன ரயிலின் ஊளைக் கேட்கிறது பசித்து முடிந்து வடியப்போகும் கணம் பற்கள் கடிந்து கொள்கின்றன வெறும் பீடியை வைத்து கொண்டு தரையைப் பார்த்தபடி நெருப்புக்கு அலைகிறேன் ஆடிக்காற்று வருகிறது என்னை அடித்துச்செல்கிறது இந்த காற்று மட்டும் ஏன்  போதவில்லை எனக்கு?

மணிக்கணக்கனின் தொடர் வாசிப்பு

எனை சிறுவன் என்ற அழைத்த காலத்தில் சரியாக நேரம் சொல்ல உழைத்திருக்கேன் கம்மலாக இருக்கும் நண்பகலையும் கண்டுபிடித்துவிடுவேன் நேரத்தை கைவிட முடியவில்லை நகர்ந்து கொண்டே இருக்கிறது நொடி முள்ளோசை தானே  பூமியின் நடைச்சத்தம் நேரக் குழப்பம் ஏற்பட்டதேயில்லை யாரிடமும் இப்போது என்ன நேரம் என்று விசாரித்தது இல்லை என்னிடம் தான் எப்போதுமே  அனைவரும் நேரம் கேட்பார்கள்  என் வருகையை கண்டு நேரம் சொன்ன காலங்களும் உண்டு இங்கிருக்கும் போதே  அங்கிருக்கும் மனம் அங்கு செல்லும் போதே  இறங்கி ஓடி விடும்  காதுக்குள் முள்ளோசை திரை விழுந்த கண்கள்  நான் வேறு யோசனையில் இருக்கிறேன் எவ்வளவு நேரத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்ற கணக்கில் இடையில் சில பிழை  பின் சென்று சரி செய்யும் வேளையிது நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள் உங்களுக்கு முன்னர் பலர் ஸ்பெஷலாய் உரைத்தவை கண் முன்னால் நிற்கின்றன காது சுவர்களில் படிந்திருக்கின்றன அதை தொடாமல் பேசுங்கள் இப்போது  ஒரு பெரிய நாவலில் மூழ்கியிருக்கிறேன் முள்ளோசை கேட்கிறது நூறு பக்கங்களை தாண்டி விட்டேன் மொத்த பக்கங்களை எண்ண மாட்டேன் இன்னொரு நூறு பக்கம் தாண்டி விட்டால் அடுத்த சிட்டிங்கில் முடித

தம்பி அஞ்சாதே!

எனை ஏன் இப்போதெல்லாம் யாருக்கும் அடையாளம் பிடிபடுவதில்லை எனக்கு எல்லாரையும் தெரிகிறது இவன் இவனின் அவன் அவனின் அவர் அவரின் அவள் அவளின் அவர்களின் இவர்கள்  இவர்களின் அவர்களை எல்லாம் ஜோடிக்கண்கள் ஜோடி மூக்கு காது தாடை ஜோடி இடுப்பு ஜோடி நடை முதுகு புட்டம் குறிப்பாக ஜோடிக்குரல் எல்லாம் துல்லியமாக விரிகின்றன எனக்கு முகமன் செய்யலாம் பார்த்தது போன்ற முகம் தானே எனக்கு பழகிய குரல் தானே எனக்கு வற்றிய மனதுடன் வலம் வரும் நேரத்தில் முகங்கள் தேவையில்லையோ தம்பி பெண்களை யாருமே இப்போது அடித்து பார்ப்பதில்லை  சிறிது தூரம் சென்று  அவள் வீடறிவதும் இல்லை, தம்பி வற்றிய மனதுடன் ஏன் உழல வேண்டும் கிழவன்களிடம் கோபம் மட்டுமே இருக்கிறது, கிழவிகளிடம் பரிகாசம் கூடியிருக்கிறது தம்பி நீர் மேலும் அடியாளத்துக்கு  சென்று விட்டது பெருநகருக்கு நிகரான சராசரியை எட்டிவிட்டது புறநகரின் மனத்தடி நீர்  முகம் மங்கி விட்டது முகத்தை அடையாளம் பிடிக்கும் நரம்பு கண்களுக்கு செல்வதில்லை மூளை தடுமாறுகிறதாம் இந்த மனிதனுக்கு நாய் பிறரை பார்க்கும்படியான படிம நிழல் தோன்ற ஆரம்பித்து விட்டது தம்பி, அஞ்சாதே உன் முகத்தை உன் அம்மா வெறிக்கிறாள் உன்