Posts

Showing posts from December, 2022

Jockey

அப்போது  காதலில் தோற்றவனின்  தளர்ந்த மலரை போல சிவந்த மொட்டுடைய குறியை  கையில் பிடித்திருக்கும் வயோதிகன் நிலத்தை தத்தி தத்தி அளந்து ஒரு சில சிறுநீர் துளிகளை  வெளியேற்றியிருக்க கூடும் பனியில் வறண்ட சிமெண்ட் கலவையில்  திளைத்தது போன்ற கால்கள்   ஒரு துளி சிறிய நீரானது மேற்பாதத்தில்  முப்பது கதிர்கள் கொண்ட சூரியனைப் போல தெறிக்கிறது பார்வை மங்கும் போது  மானம் புத்துயிர் கொள்கிறது ஒரு ரகசியம் போல காத்த குஞ்சு அதன் மென் இதழ் இன்று சிறார்களின் பால் விளையாட்டு  பொம்மையாம் சிரிப்பொலிகள் கேட்க  வேட்டியை தளரவிடுகிறார்  பின்பு சுதாரித்து சிரிக்கிறார்  கண்டாரோலி பயலுகளா 'இங்கு ஜாக்கி அல்லது எதுவுமில்லை'.