Posts

Showing posts from March, 2023

அறியாமையின் சொற்கள்

 ஒரு முறை நிகழ்ந்த விஷயங்கள் பரவசமளிப்பவை அது உப்பு கார சுவையை நினைவில் இருத்தாது தொடரும் பரவசம் முட்டாள்தன்மையை அணுகும் பரவசம் நீடித்து அறியாமையைத் தரும் அறியாமைக்குள் நுழைந்துக்கொண்டால் எல்லாம் ஆனந்த பரவசமே! பாதி தொடங்கிய வரிகளை முடிக்கும்  தைரியம் வந்து விடும் வேலைகள் நடக்கும் விளக்கணைத்தவுடன் விழித்துக்கொள்ளும் விடலைச்சிறுவனைப்போல உள்ளமும் அடிவயிறும் சூடேறும் நடுக்கத்தோடு உடல் செருமிக்கொண்டோடும் வேலைகள் நடக்கும் தொடரசை போடும் பழக்கம்   கைவிட்டோடும்  காரியகர்த்தர்களை முட்டாள் என்றழைக்க முடியுமா டிமோனை முட்டாள் எனலாமா வேலை நடக்கிறது ஆட்கள் தேவை முட்டாட்கள் தேவை முட்டாள் + ஆட்கள் - முட்டாட்கள் ‘நல்லவையெல்லாம் இரவில் தான் நடக்கும் காலை மதியமெல்லாம் உயிருடன் இருத்தலே பெரிய விஷயம்’ இப்படி ஒரு வரி இதை எழுதியது யார் என்ற குழப்பம் கூகுளில் ஏதும் கிடைக்கவில்லை என் சொற்கள் அவை ‘எனக்கான கடிகாரம் மணல் நிரம்பிய ஒரு கடிகை’ என்றொரு குறிப்பு  மேலும் ‘பிரசவ பெண்ணின் உதய சூரியக்கால்கள்  வீங்கிய குன்று வெளிமுட்டும் தலை’ இவற்றை சரி பார்க்க வேண்டியதில்லை  இவையென் சொற்கள் “பொதுவெளி என்பது ஒரு நடிப்பு” பி