Posts

Showing posts from July, 2022
எனக்கு மட்டுமே தெரிந்த என் பலம் குறித்து கூறுகிறேன் கேளுங்கள் உங்கள் கண்களுக்கு முற்றிலும்  அகப்படாத உடற்கட்டு உள்ளது என்னிடம் ஆறடுக்கு வயிறு கைகளில் நுங்கு போன்று திரண்டிருக்கும் தவளைச்சதை பெரிய பெரிய எரிக்குண்டு புட்டங்கள் கத்தரித்தாலும் வளரும் நாக்கு புரணி நுழையாத செவி தாமாக ரணமாறும் குடல் ஓய்வெடுத்து பின்துடிக்கும் இதயம் மூக்கை கூட சிந்தாத மூளைப்பயல் பராமரிப்பு தேவையற்ற குறி மிகை கண்டு அஞ்சும் மனம்  எவர்பொருளையும் தனதாக்கும் திறன் பறக்கும் மனிதன் பாயும் புலி ரகசிய போலீஸ் 007 பர்ர்.... பர்ர்... கொர்.. கொர்...

ஆண் புறாவின் முணுமுணுப்பு

சமய கோபுரங்களை கைப்பற்றியுள்ள நாட்டு புறாக்கள் சார்பாக எழுதுவது எச்சங்களால் குண்டு மணிதர்களை நிரப்பியுள்ளோம் வெண்கல மணிதன்  எலெக்ட்ரிக் மணிதன் டிங் டிங் மணிதன் டங் டங் மணிதன் மணி தன் நாவால் மேலுதடை தொட முயலும் போது அதிர்ர்ர்ந்து வருகிறது... மணியின் நாக்கை அறுத்து  ஊமையாக்க முயன்றனர் எம்முள் சிலர் சில லிபரல் புறாண்பர்கள்  அது நாக்கல்ல  மணியின் புடுக்கென்று நிறுவினார்கள் ஆனால் தளங்களில் முறையிடும்  அனைவரும் ஓசையை  முற்றுப்புள்ளியாக கொண்டனர் பல நாள் கோரிக்கையாளர்கள்  விடாப்பிடியாக தொடரடி  நிகழ்த்தி காட்டினார்கள்  நிறைவேறியவர்கள் அவரவர் பெயர்களை  மணிகளில்  வரைந்து கொண்டனர் பெட்டைகளிடத்தில் இறைஞ்சியும் முறைத்தும் வலுக்கட்டாயமாகவும் சில  உண்மைகளை சொல்லுவோம்  முனகலாக ஆண் மயில்கள் களைய வேண்டிய பூண்டு ரகமாக மாறிவிட்டன புறாக்களுக்கு தற்போது வரை  பங்கம் இல்லை  அதன்பின் கூடினால் தனலாபம் இல்லையேல் சத்த மலடுக்குள்ளான  காதுகளுடன்  தூரத்து மணியோசை  நம்பிக்கையைத் தரவல்லது என்று எழுதுவோம்

நெருப்பு கடன் கொடுத்த உயிரிடம்

மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் நெடிய நாளின் கழிவை  வெளியேற்ற உதவியவன் சக தனிக்குடியன் பிறழ் நடை போடும் அவனை நியாயப்படி வீட்டில் இறக்கி விடலாம் அவனுக்கு அவன் வீடு நினைவிருந்தால் Preferrably if he reminisce/recollect His Home புதிய இவன் நன்றி கடனின் முலைக்காம்பை நறுக்கனெ கடிப்பவன் நோ... சாரி... நான்... நெருப்பீந்த தர்மபிரபு தன் கால்களை நம்பி நடக்க தொடங்குகிறான் மன வசைகள் ஒங்க! வீடு வீடு வீடு வீடு மூன்று அடுக்குகள் கொண்ட  தரைத்தளம் முழுதும்  பார்க்கிங் உடைய  வாயிலில் பிஸ்கட் மரம் அடர்ந்த வீடு தெரு நாய்களின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு அடுக்கு என் தசைகளின் நினைவில்   மிடுக்கு நடை போட முயலும் கால்கள் போதையின் வடிவுணர்ந்த தெரு அது இடையில் நடைப்பாதை அழைக்க நெடுக நெடுக வீடாக தெரியும் ஆனால் நான்/நாங்கள் வீடேறுவேன்/வோம் சிறு அச்சமின்றி வெள்ளைத்தெளிவாக

சராசரியின் மனச்சலம்பல்

என் கவிதையில் இருந்து தப்பியோடுந் மொட்டை வால் பூனையே கேளுந் கலைஞன் என்பவன்  எதிர்ப்பில் செயல்படுபவன் சப்பை மேட்டருக்கெல்லாம்  பாரதியாய்  உணர வைக்கும் சமூகமே நான் அசல் கலைஞன்  உனக்கும் எனக்கும் செட் ஆகாது நீ பிடிக்கும் என்றால் நான் பிடிக்கவில்லை என்று புருவம் உயர்த்துவேன் இன்று நான் விரும்பி பார்க்கும் காணொளியை நீ பார்க்க காலமாகும் அப்போது அதை நான் மொறை மொறைக்க அசட்டை பண்ணுவேன் அடிப்படையில் கலைஞன்  என்பவன் தலித் தலித் என்பவனே கலைஞன் தானே கலைஞர் கலைஞன் வேறுபாடு என்ன? குயுக்தி உடையவர் கலைஞர் அது இல்லாதவன் கலைஞன் மொட்டை பூனைகளே  கருவாடுகளை மறந்த  நடுநகரத்து பூனைகளே குட்டை நாய்கள் உங்கள் பங்குகளை திருடிச்செல்கின்றன உஷார்!