சராசரியின் மனச்சலம்பல்

என் கவிதையில் இருந்து தப்பியோடுந்

மொட்டை வால் பூனையே கேளுந்

கலைஞன் என்பவன் 

எதிர்ப்பில் செயல்படுபவன்

சப்பை மேட்டருக்கெல்லாம் 

பாரதியாய்  உணர வைக்கும் சமூகமே

நான் அசல் கலைஞன் 

உனக்கும் எனக்கும் செட் ஆகாது

நீ பிடிக்கும் என்றால் நான்

பிடிக்கவில்லை

என்று புருவம் உயர்த்துவேன்

இன்று நான் விரும்பி பார்க்கும்

காணொளியை நீ பார்க்க காலமாகும்

அப்போது அதை நான் மொறை

மொறைக்க அசட்டை பண்ணுவேன்

அடிப்படையில் கலைஞன் 

என்பவன் தலித்

தலித் என்பவனே கலைஞன் தானே

கலைஞர் கலைஞன் வேறுபாடு என்ன?

குயுக்தி உடையவர் கலைஞர்

அது இல்லாதவன் கலைஞன்

மொட்டை பூனைகளே 

கருவாடுகளை மறந்த 

நடுநகரத்து பூனைகளே

குட்டை நாய்கள் உங்கள் பங்குகளை

திருடிச்செல்கின்றன உஷார்!

Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி