ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி
பிச்சையெடுக்க பழகிய
கைகளை என்ன செய்வது
பிச்சையெடுக்க பழகிய
மூளையை என்ன செய்வது
பிச்சையெடுக்க பழக்கிய
மனைவியை என்ன செய்வது
தானமிட்டு பழகிய கைகளை
என்ன செய்வது
தானமிட்டு பழகிய நண்பனை
என்ன செய்வது
தானமிட்டு பழகிய மனைவியை
என்ன செய்வது
பொய்களை என்ன செய்வது
பொய்கள் கொண்டு வந்த பணத்தை
என்ன செய்வது
பொய்கள் மீட்ட செல்வத்தை
என்ன செய்வது
ஆராயிரத்து ஐநூறை என்ன செய்வது
எழுவத்தி ஏழாயிரத்தை எப்படி
திரும்ப செலுத்துவது
உறவை எப்படி காப்பாத்துவது
என் பணம் ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது
யேந்தும் கைகளை எப்படி இடறி விடுவது
வார்க்கும் மனதை எப்படி குளறுபடி செய்வது
நாம் எப்படி வளருவது
நம் தொழிலை எப்படி வளர்ப்பது
கருணையை எப்படி வழியனுப்புவது
கடுமையை எப்படி வரவைப்பது
கண்களை எப்படி குறுடாக்குவது
மனதை எப்படி மரமாக்குவது
எப்படி எப்படி பெரிய மநுசனாவது
எப்படி எப்படி பெரிய கம்பெனியாவது
எப்படி எப்படி மனைவியை காப்பது
எப்படி எப்படி நண்பர்களை காப்பது
எப்படி எப்படி உறவை தக்க வைப்பது
பெற்ற பிள்ளைகளிடம் மரியாதையை
பெறுவது எப்படி
எப்படி இளமையிலேயே நீச்சல் பயில்வது
எப்படி மல்லாக்க படுத்து உறங்குவது
எப்படி இறந்தது போல் நடிப்பது
பொடுகளிடமிருந்து
எப்படி நீள் கேசத்தை காப்பது
படர்தாமரையிடமிருந்து எப்படி
இடுக்களை காப்பது
பிறர் கண்ணீரை எப்படி தொடைப்பது
நம் கற்பை எப்படி காப்பது
பயப்படாமல் புரோட்டா சாப்பிடுவது
அளவாக குடிப்பது
முளை விட்ட பயிரை உண்பது
அவிச்ச முட்டைகள் மேல்
நம்பிக்கை வைத்தல்
கையேந்துபவர்களை சந்தேகிக்காமல் வேண்டியது கொடுத்து விடுவித்தல்
சீட்டு போடாமல் இருத்தல்
வட்டிக்கு அஞ்சாமை
வேப்பங்கொழுந்தை நம்புதல்
மருக்களை பரிகசிக்காமல் இருத்தல்
கிழவிகளின் முலைகள்
குழந்தையின் பாலுறுப்பு
காய்ந்த மூட்டு
பசுவின் வதங்கிய காம்புகள்
வேட்கையற்ற உயிர்கள்
இறந்த குஞ்சு சங்குகளின் சடலங்கள்
உடைந்த பாட்டிலோடுகள்
நீ நம்பும் முகபாவனைகள்
கருனையற்ற ஏரி குளங்கள்
மனிதனுக்கு எதிரான கடல்கள்
காக்கைகள் மாடுகள் ஆடுகள்
நீர் கொத்தி பறவைகள்
பிற மனிதர்கள்
மின் கம்பிகள்
நீச்சலில் நண்பனை தோற்கடிப்பவர்கள்
நீச்சலில் நண்பனிடம் தோற்பவர்கள்
கோமகன்கள்
வலிப்பு நோய் பிடித்தவர்கள்
கெட்ட வார்த்தை பேசும் சிறுவர்கள்
ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி
Comments
Post a Comment