Posts

Showing posts from June, 2023

கவிதையின் முதற்பயன்

பெயர் சொல்லி அழைக்கும்  அம்மகளை முத்தமிடு இடையை  வளைத்து கொள்  என்னை விட்டுச் செல்லாதே  என்னுடன் இரு நினைவில் மென்அதிர்வு செய்வோம் தோள்களை எனக்கேதும் தெரியாது  என்பது போல் செய்து கொண்டே தலையை ஆட்டிக்கொள்வோம் வெண்டை பெண் அவள் அலட்சிய அசைவு கொண்டவள் வெண்டைப்பூ போன்ற புதிய மார்புகள் சோம்பல் முகம்  நெடிய நாசி செம்பட்டை கேசம் போ.  சென்று அவள் மூக்கை உரசு படர்ந்திருக்கும் குட்டிகுட்டிபுள்ளிகளை பார் அதன் நட்சத்திர இருப்பை காதில் சொல். கெஞ்ச வேண்டாம்  கால் விரல்களை தொடாதே புஜங்களை காட்டாதே ஒன்றுமில்லை என்று சொல் வரிகளின் உண்மையை போட்டு உடை தேவைப்பட்டால் அழைக்கலாம் என்று சொல். ஓடி வந்துவிடு திரும்பி பார்க்கும் பழக்க முண்டா? பயப்படாதே உன் இஷ்டம் போல செய் வரிகளில் ஏக்கம் தெரிகிறதா ஏக்கம் மற்றும் அவர்களின் சகோதரர்களை வழியில் இறக்கி விட்டுச்செல் எருமைகளுடன் நதியில் புரண்டெழுந்து  காய்ந்த கருஞ்சேற்றுடன்  புறநகரை உலா வரட்டும் துணிவை தரும்  பொய்களையெடுத்துச் செல் பத்தாண்டுகளுக்கு பிறகு மனதில் காதலை சுமக்க வைத்திருக்காள் சுட்டிப்பெண் குரலில் பெரிய பெண் விடலை பையன்களின்  தூக்கத்தைக் கெடுத்தவள்  சேகரத்தி