Posts

Showing posts from January, 2023
தூங்காத போது  அரைத்தூக்கத்தில் இருக்கிறேன் என் தூக்கத்தை நிந்தனை செய்த  பால்ய நட்பை துண்டித்திருக்கிறேன் பிறந்த மகனை பல் பதியும்  படி கடித்திருக்கிறேன் அவன் குரல்வளையை  தேடியிருக்கிறேன் பின்பு நிதானம் பெற்று இவ்வாறு  நா குளரியதாக எண்ணம் 'தூக்கம் வந்தால் தூங்க வேண்டும் அழ கூடாது' அதன்பிறகான உறக்கம் அவன் நெஞ்சுக்கூட்டின் அசைவில்  உறுதி செய்யப்பட்டு வருகிறது. துருவ கரடியிடம் என்  பொறாமையுணர்வை பகிர்ந்து கொண்டுவருகிறேன் தூங்குவேன் க்ர்ர்... க்ர்ர்.. நாளைய காலத்திற்கு  சேகரிக்க மாட்டேன் புறநகர கரடிகள் வருடம் முழுதும்  தூங்கும் வல்லமை கொண்டவை தங்கள் அச்சங்கள் தோல்விகளை தூங்கி தூங்கி விலக்கி கொள்கின்றன அவற்றின் கண்ணங்களில் சமாதனங்கள் சாக்குப்போக்குகள் கொடுவாக்களாக வடிந்து காய்ந்து போயிருக்கும்  இரு சக்கர வாகனத்தை  இயக்கியப்படியே தூங்க முடியும் பேருந்தே.... செல்ல பேருந்தே... பகல் பயணத்தின் சின்ன அசைவுகளும் தூக்கத்தின் நண்பர்கள்  தாண்டிச்செல்லும் வாகனங்கள் விலகி ஓடும் மேகங்கள் நகரும் மரங்கள் நகரும் புட்டங்கள் நகரும் நகரம் நகரின் புட்டங்கள் நகரின் சூடான தொப்புள் குழி அதில் உடைத்து விடப்ப