Posts

Showing posts from September, 2022

ராமலிங்க கவறன்

விரிக்கப்பட்ட சாக்கு கோணியில்  மறைந்திருக்கிறது  வீடு வாசல் மனை  வயல் கதிர் விதையெல்லாம்  ஆகையாலே ஆட்டம் முடிந்ததும்  உதறப்படாமல் பட்டு போல மடித்து  வைக்கப்படுகிறது கோணி கவறாடிகளின் சுருட்டு புகை  சனல் பின்னல்களிலுள்ளே  ஒளிந்திருக்கும் சொத்துக்களை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றன. நானும் என் உடன்பிறந்தோறும் சுருட்டு புகையை நெஞ்சில் நிரப்பி வெளியே குதித்து ஓடினோம். வைத்து ஆடப்படுவதற்கு முன்பே  நோய்க்கு பலியானாள் அம்மா  சீட்டுகளை ஏந்த முடியா வண்ணம்  நடுங்குகிறது ராமலிங்கரின் விரல்கள். ஒரு மாற்று இரவில்  புதிய ஆட்டக்காரர்களாக தனது புதல்வர்கள் கட்டுகளை  கலைத்து போடுவதை கண் இமைக்காமல் பார்க்கிறார். முந்தைய பணைய பொருட்கள் ஆட்டக்காரர்களாக  ஆக்கப்படுவதுதான் விதி. லாட்டரித்தாள்களை நாட்டு வெடியில்  வைத்து குப்பை  பெருக்கிய பிள்ளைகள். சில்வர் மருந்து போக போக மந்திர எண்ணிற்கு சுரண்டுகிறான் பெரியவன். சின்ன சின்ன பொட்டலத்தை பிரித்து பிரித்து பார்க்கிறாள் கடைக்குட்டி. நடுவில் பிறந்தவன் தரையில் தங்க நாணயம் தேடி அலைகிறான். அவர்கள் நிமிர்ந்து வானைப் பார்த்தால் நான் சொல்லுவேன். பிள்ளைகளா, சூது அதிர்ஷ்டமல்