Posts

Showing posts from November, 2022

நம்பர் இரண்டு

மாடாயிருந்தது போதும் மண்புழுவாகு உருவிய முளைக்கம்புடன் வரப்பிலேறி நிற்கும் பசுவின் காதில் ஒலிக்கிறது. மாடாயிருந்தது போதும் மண்புழுவாகு மண்ணுக்கடியில் இருக்கும் இருட்டுக்கு பழகு, அவரசத்தில் மேய்ந்த மண்ணை மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோடலாம் மண்புழுவாகு புற்களின் வேர்களை தொந்தரவு பண்ணாமல் உரசலாம் மண்புழுவாகு நிரம்பிய மடியில் மண்ணைக்கறக்கலாம் மண்புழுவாகு  நீள வேறுபாடில்லாத காம்புகளை பெறலாம் மண்புழுவாகு தூண்டில்காரனின் விரல்கள் நிமிட்டாத காம்புகள் உண்டு உன்னிடம் மொண்ணையான கொம்புகளுமுண்டு உன்னிடம் உடலே நாக்காக பெற்ற பிறவி நீ மருளும் கண்களும் உண்டொனக்கு மண்ணுக்குள்ளே எந்த மனிதனும்  தோற்று போவான் உன்னிடம் நீ தின்று செரிக்காத பொருளுண்டா நீ அறியாத கொளம்படிகள் உண்டா மேலே செழிப்பவையெல்லாம் உன்னால் நடக்கும் விஷயங்கள் குஞ்சமுடைய வாலுமுண்டு பசியில் வரும் மனிதனுக்கு ஒன் காண்டாமிருக கொம்பை  கொண்டுதான் வெளியே வருகிறாய் நீ மீனுக்கு போலி இரையாவது ஒன் பெருந்தன்மையல்லவா மண்ணுக்கு அடுத்து மண்புழுவிற்கு தான் பெருந்தன்மையதிகம்  மண்ணுக்கடுத்து மண்புழுதான் நம்பர் இரண்டு நீ.