நெருப்பு கடன் கொடுத்த உயிரிடம்
மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்
நெடிய நாளின் கழிவை
வெளியேற்ற உதவியவன்
சக தனிக்குடியன்
பிறழ் நடை போடும் அவனை
நியாயப்படி வீட்டில் இறக்கி விடலாம்
அவனுக்கு அவன் வீடு நினைவிருந்தால்
Preferrably if he reminisce/recollect
His Home
புதிய இவன் நன்றி கடனின்
முலைக்காம்பை நறுக்கனெ கடிப்பவன்
நோ... சாரி... நான்...
நெருப்பீந்த தர்மபிரபு தன் கால்களை
நம்பி நடக்க தொடங்குகிறான்
மன வசைகள் ஒங்க!
வீடு வீடு வீடு வீடு
மூன்று அடுக்குகள் கொண்ட
தரைத்தளம் முழுதும்
பார்க்கிங் உடைய
வாயிலில் பிஸ்கட் மரம் அடர்ந்த வீடு
தெரு நாய்களின் பாதுகாப்பில்
இருக்கும் ஒரு அடுக்கு
என் தசைகளின் நினைவில்
மிடுக்கு நடை போட முயலும் கால்கள்
போதையின் வடிவுணர்ந்த தெரு அது
இடையில் நடைப்பாதை அழைக்க
நெடுக நெடுக வீடாக தெரியும்
ஆனால் நான்/நாங்கள்
வீடேறுவேன்/வோம்
சிறு அச்சமின்றி
வெள்ளைத்தெளிவாக
Comments
Post a Comment