Jockey
அப்போது
காதலில் தோற்றவனின்
தளர்ந்த மலரை போல
சிவந்த மொட்டுடைய குறியை
கையில் பிடித்திருக்கும் வயோதிகன்
நிலத்தை தத்தி தத்தி அளந்து
ஒரு சில சிறுநீர் துளிகளை
வெளியேற்றியிருக்க கூடும்
பனியில் வறண்ட
சிமெண்ட் கலவையில்
திளைத்தது போன்ற கால்கள்
ஒரு துளி சிறிய நீரானது
மேற்பாதத்தில்
முப்பது கதிர்கள் கொண்ட சூரியனைப்
போல தெறிக்கிறது
பார்வை மங்கும் போது
மானம் புத்துயிர் கொள்கிறது
ஒரு ரகசியம் போல காத்த குஞ்சு
அதன் மென் இதழ்
இன்று சிறார்களின் பால் விளையாட்டு
பொம்மையாம்
சிரிப்பொலிகள் கேட்க
வேட்டியை தளரவிடுகிறார்
பின்பு சுதாரித்து சிரிக்கிறார்
கண்டாரோலி பயலுகளா
'இங்கு ஜாக்கி அல்லது எதுவுமில்லை'.
Comments
Post a Comment