நிற்காமல் வீசும் பின்மதியக்காற்று

இதுவரை ஏரியின் முதுகை பார்த்துக்கொண்டிருந்தவன்

முதன்முதலாக அதன் 

முன்னால் நிற்கிறேன் 

முகம் வேறொரு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வந்துவிட்டது

ஏரி மதிய அசதியில் சரிந்திருக்கும் 

தாய் போல கிடக்க

முலைகளைத்தேடி ஊறும் குட்டிகளைப்

போன்று எருமைகள்

பச்சயத்தில் திளைக்கின்றன

ரயிலின் ஊளைக் கேட்கிறது

பசித்து முடிந்து வடியப்போகும் கணம்

பற்கள் கடிந்து கொள்கின்றன

வெறும் பீடியை வைத்து கொண்டு

தரையைப் பார்த்தபடி

நெருப்புக்கு அலைகிறேன்

ஆடிக்காற்று வருகிறது

என்னை அடித்துச்செல்கிறது

இந்த காற்று மட்டும் ஏன் 

போதவில்லை எனக்கு?

Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்