நீங்கள் பிரமிளோட கல்லறைக்கு போயிருக்கீங்களா

தெரிந்தவரை தேடுகிறது கண்கள்

அவரது முதல் தொகுப்பின் பெயரைச்சொல்லி நாம் சந்தோசம் கொள்ளலாம்

அவர் கடுப்படையலாம்

அவர் பரிந்துரை உங்களுக்கு தெய்வ வாக்கு

கோபி என்றால் டேபிள் டென்னிஸ்

லட்சுமி என்றால் உடனே வீரலட்சுமி வெள்ளைப்பல்லி விவகாரம் என    

வாக்கியத்தை முடிக்க வேண்டும் 

இடையில் நாங்கள் கோபியை மிரட்டினோம் என்று             

எம் டி எம்மை சொருக வேண்டும்

உன்னத சங்கீதம் ப்ரெஸ்சில் இருக்கிறது சாரு மட்டும் சும்மாவா

ஏங்க நீங்க மகாமுனி வாசிச்சிறுக்கீங்களா 

எனக்கு அப்பாவின் குகையில் இருக்கிறேன் தான்ங்க

கடவு கடவ மறந்துட்டீங்க

கமலாலயன்னு ஒரு தோழர் குருவினு ஒரு கதை 

 ‘தந்தைக்காக’ டைப் அசோகமித்ரன லைட்டா தட்டிட்டு போயிடுவாரு

ஊமங்காடையன தெரியுமா பாக்குறீங்களா

நீங்க மயில் ராவணன் ஆகாசமாடனல்லாம்..

பாவம் குக்கிராமத்துல வராங்க என்ன பன்றது

நல்ல கேரக்டர் ஆனா குடி காலி பண்ணிருச்சு

உட் யூ லைக் டு ஈட் ஃப்ரூட் 

அவரு வம்பு படுக்கையோ மெத்தையோ அது வேணாங்க

நீங்கள் குற்றத்தின் நறுமணத்தை அக்குளில் அடித்து கொண்டு 

தப்பியோடும் ரஸ்கோல்நிக்கோவை விரட்டிப்பிடியுங்கள்

ஏன்பா அவ்வளவு புடிக்குமா? ஒரு வரி மனசுல இருந்து சொல்லு..

😠😠😠😠😠😠😠

ஏன்பா சரி விடு நீ எழுதியதில் ஒரு வரி சொல்லு

😠😠😠😠😠😠😠

ம்ஹும்… நீங்கள் பிரமிளோட கல்லறைக்கு போயிருக்கீங்களா?


Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி