மனதில் புற்றுள்ள மனிதன்
நாள் முழுவதும் விழுங்கிய சொற்கள்
கடபுடவென்று வயிற்றில் புரளுகிறது
பிரியும் காற்று குமட்டலை கொடுக்கிறது
சத்தத்தை கேட்டு சிரிக்கும் சிலர்
தோற்றத்தைக் கண்டு கலங்கும் சிலர்
காழ்ப்பு உட்பகை என்ற எதுவும் இல்லை
சொல்ல வேண்டிய சொற்கள்
அதை நாக்கினால் வெளியேற்றாமல்
இவ்வளவு சங்கடம்
நெடிய வருத்தம் இல்லை
பொச்செரிச்சல் இல்லை
முகத்தில் பருக்கள் தோன்றிய போது தோன்றிய போட்டி அது
ஒன்னைவிட ஒரு படி மேலே இருப்பது
எல்போ செய்து முன் செல்லுதல்
அந்த கெட்ட மதி, சிறு மதியல்ல
வேறு என்ன
அது அது வன்மம் அல்ல
கொலை செய்தால் வடிந்து விடும் வன்மம்
ஒரு பஞ்ச் ஒரு ஸ்டாப் ஒரு கிக்
இது இது வேறு
ஆம் அது
புற்றெண்ணம்
ஒரு வேளை
கு சிவராமனிடம் மருந்து இருக்கலாம்.
Comments
Post a Comment