ஆசுவாசம்

மேல் தொடையின் நமச்சலை அழுத்தி சமன் செய்து விட்டு பாலத்தின் சரிவில்

படுக்கையை விரிக்கிறாள் கிறுக்கி

காலி பிரதான சாலைகளில் கவட்டைகளை பிளந்தவாறு சாகசம் செய்கின்ற நாய்கள்


பெடல்களில் ஏறி நின்று அலைபாய்கிறான் சைக்கிலோட்டி


இன்னும் கொஞ்ச நேரத்தில்


கைகளை அகல விரிக்க இருக்கிறான்


ஆக்சிஜன் உருளைகளை வரிசையாக அடுக்கி நூறு நாய்களை பிணைத்து  உருட்டி


செல்கின்றன பேய்க் குழந்தைகள்


புதிய முதல்வரின் வேகத்தில்


நாளை மறுநாள் கூவத்தில் படகு ஆம்புலன்ஸ் விடக்கூடும்


தொடர் வேலையில் களைத்து திரும்பும் கிறுக்கன் கைலிக்கு மாறுகிறான்


கை நிறைய பக்கோடாத்தூள்


Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி