சுனையேரிய சொற்கள் நிறைந்த இந்த வரியை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது மிரட்ட முடியாது புகார் செய்ய முடியாது. யாருக்கும் அஞ்சாத வெண்டிப்பிஞ்சின் சுனை போன்றது
பறித்து கைகளால் சரி செய்து
சாப்பிட தொடங்கலாம்
ஆனால் அப்படி உடனடியாக
எதையும் ஒடித்து சாப்பிடும்
நபர்களை வெறுக்கிறேன்
அவர்கள் கசக்குகிறார்கள்
எல்லாவற்றையும் கசக்குகிறார்கள்
காம்புகளை திருகுகிறார்க்கள்
ஆனால் கொய்யா திருடர்களை
இனிப்புடன் வரவேற்கிறேன்
மொட்டை காய்களின் கசப்பை
வேண்டி நிற்கிறேன்
மென்பட்டை உரியும் தோள்களில்
தடுமாறும் எறும்புகள்
கொய்யா திருடர்களின்
தொடைக்கு காத்திருக்கின்றன
அவை மரத்தை பேணும்
கிழவியின் நண்பர்கள்
யார் கொய்யா மரத்தை பேணுவது?
கொய்யாவை சுவைப்பவர்களே
கொய்யாவை பேணுபவர்கள்
Comments
Post a Comment