பாதாளம் செல்லுவோம்
குடியும் எனை கைவிட்ட பிறகு
நான் யாரிடம் தஞ்சம் அடைவேன்
எனது லவ் ஹான்டல்ஸ்
உனது இடை மடிப்பு
விரல்கள் கண்கள்
நாம் வரிக்குதிரைகளின்
வரியற்ற நிலை
கோடுகளில்லா புலிகள்
ரோஜா வடுக்களற்ற சிறுத்தைகள்
நாமமில்லா நாஜா நாஜா
புரட்டாசி சனியில்
நாம் ஆட்டுக்கறி உன்ன முடியவில்லை
நாம் பிராய்லரிடம் தஞ்சம்
அடைய முடியுமா
எப்போதும் வலிக்கும் குதிகால்கள்
காந்தும் ஆசன வாய்
தூங்கத் துடிக்கும் மூளை
வேலையிடம் தஞ்சம் அடைய முடியுமா
நாம் செய்வதெல்லாம் ஒரு வேலையா
சாத்துக்குடிகளை பிழிந்து நோய் வாய்ப்பட்டவர்களுக்கு கொடுப்பது
ஜுரம் கண்ட ஒருவனின்
நெற்றியை அணுகுவது
சொட்டு சொட்டாக இறங்கும்
மருந்தை கண்காணிப்பது
கைகட்டி தூங்கும் செவிலியை
சிஸ்டர் என அழைப்பது
அசிரத்தையை கண்டுகொள்வது
அசிரத்தையை உண்டுபண்ணுவது
வாந்தியை எதிர்கொள்வது
கொய்யா பழுப்பது
வாழை கருப்பது
வறுபடும் முட்டை
வியர்க்கும் தொந்தி
காவலாளிக்கு வைக்கும் முகமன்
முன்னேற சொல்லும் நண்பன்
முதுகில் நாடு பிடிக்கும் தேமல்
நான் யாரிடம் எதனிடம் அடைவேன்
அண்ணா அறிவாலயத்தின்
சுழற்பாதை முதல்
புழல் ஏரியின் முதுகு வரை
சுமையறியாது எனை ஏற்றி
செல்லும் நூற்றைம்பது சிசி
பல்சரிடம் தஞ்சம் அடைகிறேன்
அதன் இதயம்
பொசுங்கும் வாடையோடு
திருகளுக்கு ஏற்ற முனகளோடு
அமர்த்தி செல்லும் இயந்திரத்தின்
வலுவுக்குள் இருக்கிறேன்
அதன் இதயத்தின் சூட்டை
பருத்த எரிபொருள் தொட்டியை
கவனம் கொள்கிறேன்
மண்டையில் இருந்து ஒரு வெளிச்சம்
திரும்பும் போது ஒரு சமிஞ்ஜை
வேகக்குறைப்பில் ஒரு சிவப்பு
சல்லென்று செல்லும் முனைப்பு
வேடிக்கை பார்க்கும் மனம்
உயிர்களை நேசிக்கும் பாங்கு
வானிலைக்கு அஞ்சாத குணம்
கணக்கு கொள்ளாத அலைச்சல்
தனியாக இருக்கும் தன்மை
கூட்டத்தில் சமாளிக்கும் பொறுப்பு
குழந்தைகளை ஏற்றுக்கொள்ளுதல்
சாலைகளை நினைவு கொள்ளும்திறன்
பள்ளம் மேடுகளை மறத்தல்
லவ் ஹான்ட்லஸ் இல்லா உடல்
மடிப்புகள் குறித்த ஞானம் அற்ற
என் வண்டி செல்ல குண்டி
நீயே என் சகோதரத்துவம்
நமக்குள் அன்பு இல்லை
பொறாமை இல்லை
துவர்ப்பு இல்லை கார்ப்பு இல்லை
தித்திப்பு இல்லை கணக்கு இல்லை
யாரும் போகாத பாதை போவோம்
மலையேருவோம்
குகை நுழைவோம்
பாதாளம் செல்லுவோம்.
Comments
Post a Comment