மகன் கண்டுபிடித்த நிலம்

இப்போது நான் வாழும் இந்த புறநகரை

என் அப்பாவிற்கு தெரியாது

அவர் இந்த தெருக்களை எனக்கு அறிமுகம்

செய்து வைக்கவில்லை

இந்த மனிதர்கள் யாரையுமே 

அவருக்கு தெரியாது 

பம்பாய் என்ற சிறுவன் 

அவனது உடைந்த மேற்பல் 

உருண்ட தொப்பை

குட்டி குஞ்சானின் வேக ஓட்டம்

நோண்டியின் சிரிப்பு எதுவுமே தெரியாது

நாங்கள் இங்குள்ள மறுபிறவி

குளக்கரையின் நண்பர்கள்

என்னை அவர்களுடன் பழக விடாமல் 

தடுக்க முடியாது

நான் ஒரு அப்பாவாக நடந்து கொண்டிருக்கிறேன் கைகளை வீசி

என் பிள்ளையுடன் சறுக்கு மரத்திலும்

ஊஞ்சலிலும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் 

யாருமே என்னை தடுக்க முடியாது

அப்பாவால் ஒன்றுமே செய்ய முடியாது

ஏனென்றால் இங்கு நான் தான் அப்பா

சிறுவர்களுக்கு அங்கிள் 

அதிகாரம் என்னிடமே உள்ளது

இது நான் கண்டுபிடித்த நிலம்

ஹா ஹா ஹி ஹி

இங்கு நான் தான் அப்பா

இது நான் கண்டுபிடித்த நிலம்.

Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி