தடா

பர்வதங்கள் அழைக்கும் சாலைகள்

அதன் முதுகை நோக்கி செல்லும் நாங்கள் 

வழியில் நூறு எருமைகளை

மேய்க்கும் பெண்கள் 

கதாநாயகிகள் காக்கைகளை 

விரட்டும் வேலையில் 

குல் விற்கும் கிழவி

கள் விற்கும் மகன்

செம்மண் எங்கள் கரிய டயர்களை

வண்ணம் பூசுகிறது

மாமிசங்கள் மலையேற்றம்

நாக்கு கால்களுக்கு வலு சேர்கிறது

வெள்ளியங்கிரி மலை சாகசம்

சதுரகிரி செல்லும் திட்டம்

பர்வதமலை நினைவுகள்

எல்லாம் பெண்கள் செருப்பை சோதிக்கிறது

கள் அருந்திய தந்தை முன்னேறுகிறார் 

தொலைந்து போகிறார்

அவர் உச்சிக்கு சென்றது 

தொலைந்து போனது ஆகிறது

கற்கள் குரங்குகள் நிறைந்த ஓடைகள்

முலைகள் பொட்டுகள் 

நிறைந்த தேக்கங்கள் 

என் பிள்ளை என் தோளில் 

என் முலை பிடித்து ஒட்டி கொள்கிறது

நீர் இனிக்கிறது 

தேன் போல் தித்திப்பு

அக்குள் தெரிகிறது

தொப்புள் தேடுகிறோம்

குண்டிப்பிளவில் கண் நிற்கிறது

பர்வதங்கள் காலடியில்

விசில் சத்தம் கட்டுப்படுத்துகிறது

முன்பு சிரைப்பட்ட தழும்புகளுக்கு 

இறந்த நண்பன் முகம் 

யாவகம் வருகிறது

வெற்று முதுகு வடிந்த விரைகளை

கணமாக்குகிறது

குரங்குகளுக்கு எதுவும் கிடையாது

அதன் சாதுர்யங்கள் பலிக்காது

கண்கள் ஜெயித்து விட்டன

திருப்பதியாம் குற்றாலமாம்

வந்து பாருங்கள் தடாவுக்கு

Comments

Popular posts from this blog

தயை

ஒரு சூரியன் மட்டுமே வாய்த்த பூமி