நான் அவ்வப்போது அம்மாவை நினைத்து அழுவேன்

தவறுக்கு பின்பு எங்கு போய் 

ஒழிந்து கொள்வது அம்மே

உன்னிடமே என் விளையாட்டை

காட்டினால் எப்படி பிழைப்பேன் நான் 

ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா

என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ

பெற்ற தாய் போல தானே 

தாய் அடிக்கலாம் 

சித்தி அடிக்கக்கூடாது

தெரியாதா 

உனக்கு ஒரு தண்டனையே என்று நான்

செய்த அவச்செயல்

அம்மட எண்ணம் தோன்றும் போதே 

என் வாழ்நாள் நிம்மதியை

இறுகப்பற்றிக் கொண்டது

அதன்பின் நான் தற்சுழலில் சிக்கிக்கொண்டேன்

படபடப்புடன் யோசனையில் இருக்கும் உடல்வாகை பெற்றேன்

என்னை நல்லவன் என்று அழைத்தார்கள்

சிறு வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள்

நான் அவ்வப்போது அம்மாவை 

நினைத்து அழுவேன் 

அம்மாவையேன்றால் உன்னை

நினைத்து தான் அம்மே 


தவறுக்கு பின்பு எங்கு போய் 

ஒழிந்து கொள்வது அம்மே

உன்னிடமே என் விளையாட்டை காட்டினால் எப்படி பிழைப்பேன் நான் 

ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா

என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ

வாஞ்சையுடைய மகள் போல 

குட்டி தங்கையைப் போல

நல் காதலியைப் போல

தடித்த தோல் முண்டங்களை 

எருமை மாடுகளை தெரியாதா 

உனக்கு ஒரு சந்தோசம் என்று நான்

செய்த அவச்செயல்

அம்மட எண்ணம் தோன்றும் போதே என் மீதிநாள் நிம்மதியை 

கைக்கொண்டு விட்டது

அதன்பின் நான் மீண்டெழ முடியுமா

சன்னதியின் வெடிச்சத்தம் 

படபடப்பை யோசனையில் இருக்கும் உடல்வாகை கரைத்து விட்டது

நான் நல்லவனில்லை என்று உலகு கண்டுகொண்டது 

நான் அம்மாவை நினைத்து

அழ ஆரம்பிக்கிறேன்

அம்மாவையென்றால் உனை நினைத்துத்தான் அம்மே

என் கோயிந்தம்மே!

Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்