பழைய கருப்பு

தம்பி, நான் சாப்பிடும் லாலி பாப்பை உற்று நோக்காதே

அங்கு கருப்பாய் வட்டமாய் இருக்கிறது பார்

உனது மிட்டாய் அதை சூப்பு


அப்பா, எனது லாலி பாப்பை பார்க்காதே


அங்கு கருப்பாய் வட்டமாய் இருக்கிறது பார்


உனது மிட்டாய் அதை சூப்பு


அம்மா நான் போட்டியிலில்லை


அப்பாவுக்கு இப்போதைக்கு வாய்க்காது


தம்பி உனது மிட்டாய் அது


உனது விரலை நம்பாமல்

வேண்டும் போது அழுது பெற்றிடு


ஆறு மாதங்கள் உனது மாதங்கள்


மூத்தவன் சொல்கிறேன்


உனது உதடு பார்த்ததை 

உன் உள்ளம் பார்க்காது 


உன் நினைவு பார்த்ததை

ஊர் மறந்துவிடும்


நமக்கென ஒரு முலை பெருகி வரும்

அது வரை காத்திருக்க வேண்டும்


நினைவில் உள்ள கருப்பை

தாய்க்காம்புகளை அதில் தேடு


உன் தேடல் கடன் பெறுபவனின் மெனக்கடல் போன்று ஓயாது ஓட வேண்டும்


கிடைத்தவுடன் உன் முலைக்காரி

உன் கண்களை மூடச்சொல்லுவாள்


நீ மூடுவது போல மூட வேண்டும்


நினைவில் உள்ள கருப்பை

கொண்டு வந்து விடு


அது தான் உன் சுவைக்கு மறுத்த

பழைய லாலி பாப்.




Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்