மான் குட்டி மானாகும் போது

கோடையில் மான் குட்டி மானாகியது

சிங்கம் அதன் வால் குஞ்சத்தை இழந்தது

தனது பாகங்களின் பொறுப்பின்மைக்கு

யார் பொறுப்பேற்பது 


கவியின் தொடர்த் துயருக்கு 

யார் பொறுப்பேற்பது


அதற்கு காரணம் என்ன 


விடுப்பிற்கு என்ன காரணம் சொல்வது


ஒன்றுமில்லா விஷயம் என்பது யாது?


மான் குட்டி மான் ஆனால் என்ன?


சிங்கத்தின் புடுக்குகள் 

வலுவிழந்தாலென்ன?


உன் ஆசைகள் நூலாம்படை போலன்றி

தேமல் போன்று கழுத்துடன் காது தாண்டி

கண்ணத்திற்கு வர வேண்டும்


உன் விதைப்பை முழுக்க உன் ஆசை நிறைந்து இருந்தால்


உன் முன் வைக்கப்படும் வணக்கங்கள் 


உன் முன் திமிரும் முலைகள் 


தம்பி, நம் இலையில் வைக்கப்படும் பருத்த பண்டங்கள் அனைத்தையும்

வேண்டாம் என்போம்


நீ சிந்திக்கும் போது

உன் முனை அதிர்கிறது


அது நீளும் போது 

செயலாற்றுகிறாய் 


அதன் பின்பு சின்ன இளைப்பாரல் 

பின்பு தொடரும் ஓட்டம் நடை ஓட்டம்


மூச்சு ஸத்தம் 

முஸ் முஸ் ம்சு ம்சு

ம்ஹ ம்ஹ ஹ ஹ ஹா 





Comments

Popular posts from this blog

கவிதையின் முதற்பயன்

புறநகரின் நீர்நிலைகளுக்கு

கோடை கொண்டு வரும் மாற்றம்