Posts

மான் குட்டி மானாகும் போது

கோடையில் மான் குட்டி மானாகியது சி ங்கம் அதன் வால் குஞ்சத்தை இழந்தது தனது பாகங்களின் பொறுப்பின்மைக்கு யார் பொறுப்பேற்பது  கவியின் தொடர்த் துயருக்கு  யார் பொறுப்பேற்பது அதற்கு காரணம் என்ன  விடுப்பிற்கு என்ன காரணம் சொல்வது ஒன்றுமில்லா விஷயம் என்பது யாது? மான் குட்டி மான் ஆனால் என்ன? சிங்கத்தின் புடுக்குகள்  வலுவிழந்தாலென்ன? உன் ஆசைகள் நூலாம்படை போலன்றி தேமல் போன்று கழுத்துடன் காது தாண்டி கண்ணத்திற்கு வர வேண்டும் உன் விதைப்பை முழுக்க உன் ஆசை நிறைந்து இருந்தால் உன் முன் வைக்கப்படும் வணக்கங்கள்  உன் முன் திமிரும் முலைகள்  தம்பி, நம் இலையில் வைக்கப்படும் பருத்த  பண்டங்கள் அனைத்தையும் வேண்டாம் என்போம் நீ சிந்திக்கும் போது உன் முனை அதிர்கிறது அது நீளும் போது  செயலாற்றுகிறாய்  அதன் பின்பு சின்ன இளைப்பாரல்  பின்பு தொடரும் ஓட்டம் நடை ஓட்டம் மூச்சு ஸத்தம்  முஸ் முஸ் ம்சு ம்சு ம்ஹ ம்ஹ ஹ ஹ ஹா 

பழைய கருப்பு

தம்பி, நான் சாப்பிடும் லாலி பாப்பை உற்று நோக்காதே அங்கு கருப்பாய் வட்டமாய் இருக்கிறது பார் உனது மிட்டாய் அதை சூப்பு அப்பா, எனது லாலி பாப்பை பார்க்காதே அங்கு கருப்பாய் வட்டமாய் இருக்கிறது பார் உனது மிட்டாய் அதை சூப்பு அம்மா நான் போட்டியிலில்லை அப்பாவுக்கு இப்போதைக்கு வாய்க்காது தம்பி உனது மிட்டாய் அது உனது விரலை நம்பாமல் வேண்டும் போது அழுது பெற்றிடு ஆறு மாதங்கள் உனது மாதங்கள் மூத்தவன் சொல்கிறேன் உனது உதடு பார்த்ததை  உன் உள்ளம் பார்க்காது  உன் நினைவு பார்த்ததை ஊர் மறந்துவிடும் நமக்கென ஒரு முலை பெருகி வரும் அது வரை காத்திருக்க வேண்டும் நினைவில் உள்ள கருப்பை தாய்க்காம்புகளை அதில் தேடு உன் தேடல் கடன் பெறுபவனின் மெனக்கடல் போன்று ஓயாது ஓட வேண்டும் கிடைத்தவுடன் உன் முலைக்காரி உன் கண்களை மூடச்சொல்லுவாள் நீ மூடுவது போல மூட வேண்டும் நினைவில் உள்ள கருப்பை கொண்டு வந்து விடு அது தான் உன் சுவைக்கு மறுத்த பழைய லாலி பாப்.

சமிஞ்ஞை தரும் மஞ்சள்

பச்சை தான் மஞ்சளைக் கொண்டு வருகிறது என்றுரைத்த கற்பூரவள்ளியே உன் சுனை வெள்ளையை கருந்திட்டுகளை சித்திரத்தில்  பிடிப்பேன் உன் காம்பின் சுருளை  அழித்து அழித்து வரைந்து நேர்த்திக்கு முயல்வேன் டசனுக்கு மேல் பழங்களுள்ள சீப்பில் ஒவ்வொரு பழத்தையும் வரைய ஒரு ஆண்டு முழுவதையும் எடுத்துக்கொள்வேன் 'பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக வரைந்த கற்பூரவள்ளிகள்' என்ற பெயரில் தன் எதிர்காலத்தை நோக்கும் அப்பழங்கள் தங்களை முழு கருப்பாக்கி பிராந்தி மனத்தை பரப்பும் கருப்பை அண்டவிடாத பழங்கள் வெண்மஞ்சள் நிறத்தில் பார்ப்பவரின் கண்களுக்குள் மிளிரும் அவைகளை பார்க்கும் தோறும் பழைய பசிகளின் நினைவு ஓடிவரும் அவைகளை நினைவில்  நிறுத்தினால் பசி பெருகி வழியும் இரவு பசிக்கான பழமாக தன்னை அறிவித்துக் கொண்டு விட்ட கற்பூரவள்ளியே உனை மட்டுமே நம்பி இருந்த இரவுகளின் கணக்கைச்சொல்லவா  நீ பழுக்காமல் போக்கு காட்டியது எத்தனை முன்னிரவுகள் பின்னிரவிடம் உன் பிடி இளகியது நீ காயாக இருக்கும் போது உன்னிடம் யாரும் அண்ட முடியாது சகித்து உட்கொள்ள முடியாது மஞ்சளாக சமிஞ்ஞை தருவாய் அதன் பிறகு தான் யாரும் உன்னை நெருங்க முடியும் அரைக்காயாக இருக்கும்

கோடை கொண்டு வரும் மாற்றம்

சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான்  மேல் ஈறு தெரியும்படி எப்போதும் லப்பர் வாயை திறந்தே வைத்திருப்பவன் இந்த கோடையில் வாயை மூடிக்கொண்டான் மாட்டுப்பல் போன்ற தன் பற்களை இந்த கோடையில் மறைத்து கொண்டான் சித்ரவேலு எப்போதும் பேசிக்கொண்டே இருப்பான் கண்ணச்சதை ஆடும் பொய்க்கோளி புடுக்கு அவன் அறிமுகப்படுத்திய சொல்தான் அதன் பிறகு என்னை அழைத்து  புடுக்கறுத்துருவேன் என்று சொல்லச்சொல்லி அழகு பார்த்தான் இதுதான் புடுக்கு இங்க பாரு என்று ஊரணி உள்ளிருந்து எம்பி எம்பி குதிப்பான் சித்ரவேலு இந்த கோடையில் மாறிவிட்டான் சித்ரவேலு வாயை மூடிக்கொண்டான் சித்ரவேலு பேண்ட் போட்டுக்கொண்டான் வேட்டிக்கட்டுகிறான் மேல் துண்டு போடுகிறான் அப்புறம் சித்ரவேலுக்கு ஏர் நெத்தி விழுந்து கொண்டிருக்கிறது தற்போது சித்ரவேலுக்கு புடுக்கு இருக்கும் இடம் தெரியாமல் கிடக்கிறது நான் இறந்து போனதும் சித்ரவேலு பேசுவதை நிறுத்திக்கொண்டான் என்கிறார்கள் தூண்டில் போட மட்டும் இந்த ஊரணிக்கு வந்து போகிறானாம்  மிதக்கும் தட்டை சிமிட்டும் போது எதையோ நினைத்து நினைத்து அழுது கொள்கிறானாம் தலை பாரத்தோடு வரப்புகளில் தனியாக நடந்து வரும் போது எப்போதும் கேவல் சத

நான் அவ்வப்போது அம்மாவை நினைத்து அழுவேன்

தவறுக்கு பின்பு எங்கு போய்  ஒழிந்து கொள்வது அம்மே உன்னிடமே என் விளையாட்டை காட்டினால் எப்படி பிழைப்பேன் நான்  ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ பெற்ற தாய் போல தானே  தாய் அடிக்கலாம்  சித்தி அடிக்கக்கூடாது தெரியாதா  உனக்கு ஒரு தண்டனையே என்று நான் செய்த அவச்செயல் அம்மட எண்ணம் தோன்றும் போதே  என் வாழ்நாள் நிம்மதியை இறுகப்பற்றிக் கொண்டது அதன்பின் நான் தற்சுழலில் சிக்கிக்கொண்டேன் படபடப்புடன் யோசனையில் இருக்கும் உடல்வாகை பெற்றேன் என்னை நல்லவன் என்று அழைத்தார்கள் சிறு வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் நான் அவ்வப்போது அம்மாவை  நினைத்து அழுவேன்  அம்மாவையேன்றால் உன்னை நினைத்து தான் அம்மே  தவறுக்கு பின்பு எங்கு போய்  ஒழிந்து கொள்வது அம்மே உன்னிடமே என் விளையாட்டை காட்டினால் எப்படி பிழைப்பேன் நான்  ஓடி ஓடி ஒழிந்து கொள்ள முடியுமா என்னை எப்படி பார்த்துக்கொண்டே நீ வாஞ்சையுடைய மகள் போல  குட்டி தங்கையைப் போல நல் காதலியைப் போல தடித்த தோல் முண்டங்களை  எருமை மாடுகளை தெரியாதா  உனக்கு ஒரு சந்தோசம் என்று நான் செய்த அவச்செயல் அம்மட எண்ணம் தோன்றும் போதே என் மீதிநாள் நிம்மதியை  கைக்கொண

நிற்காமல் வீசும் பின்மதியக்காற்று

இதுவரை ஏரியின் முதுகை பார்த்துக்கொண்டிருந்தவன் முதன்முதலாக அதன்  முன்னால் நிற்கிறேன்  முகம் வேறொரு சட்டமன்ற தொகுதிக்கு கொண்டு வந்துவிட்டது ஏரி மதிய அசதியில் சரிந்திருக்கும்  தாய் போல கிடக்க முலைகளைத்தேடி ஊறும் குட்டிகளைப் போன்று எருமைகள் பச்சயத்தில் திளைக்கின்றன ரயிலின் ஊளைக் கேட்கிறது பசித்து முடிந்து வடியப்போகும் கணம் பற்கள் கடிந்து கொள்கின்றன வெறும் பீடியை வைத்து கொண்டு தரையைப் பார்த்தபடி நெருப்புக்கு அலைகிறேன் ஆடிக்காற்று வருகிறது என்னை அடித்துச்செல்கிறது இந்த காற்று மட்டும் ஏன்  போதவில்லை எனக்கு?

மணிக்கணக்கனின் தொடர் வாசிப்பு

எனை சிறுவன் என்ற அழைத்த காலத்தில் சரியாக நேரம் சொல்ல உழைத்திருக்கேன் கம்மலாக இருக்கும் நண்பகலையும் கண்டுபிடித்துவிடுவேன் நேரத்தை கைவிட முடியவில்லை நகர்ந்து கொண்டே இருக்கிறது நொடி முள்ளோசை தானே  பூமியின் நடைச்சத்தம் நேரக் குழப்பம் ஏற்பட்டதேயில்லை யாரிடமும் இப்போது என்ன நேரம் என்று விசாரித்தது இல்லை என்னிடம் தான் எப்போதுமே  அனைவரும் நேரம் கேட்பார்கள்  என் வருகையை கண்டு நேரம் சொன்ன காலங்களும் உண்டு இங்கிருக்கும் போதே  அங்கிருக்கும் மனம் அங்கு செல்லும் போதே  இறங்கி ஓடி விடும்  காதுக்குள் முள்ளோசை திரை விழுந்த கண்கள்  நான் வேறு யோசனையில் இருக்கிறேன் எவ்வளவு நேரத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்ற கணக்கில் இடையில் சில பிழை  பின் சென்று சரி செய்யும் வேளையிது நீங்கள் வரிசையில் இருக்கிறீர்கள் உங்களுக்கு முன்னர் பலர் ஸ்பெஷலாய் உரைத்தவை கண் முன்னால் நிற்கின்றன காது சுவர்களில் படிந்திருக்கின்றன அதை தொடாமல் பேசுங்கள் இப்போது  ஒரு பெரிய நாவலில் மூழ்கியிருக்கிறேன் முள்ளோசை கேட்கிறது நூறு பக்கங்களை தாண்டி விட்டேன் மொத்த பக்கங்களை எண்ண மாட்டேன் இன்னொரு நூறு பக்கம் தாண்டி விட்டால் அடுத்த சிட்டிங்கில் முடித